Saturday, July 28, 2018

முதலீட்டில் கவனம் மிக மிக முக்கியம்.

    ஒருவர் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது மிக மிக கவனம் தேவை,  இந்தத் தொகையை நம்பிதான் தனது வாழ்நாள் முழுவதும் உள்ளது என்பதால் முதலீட்டை பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யவே கூடாது, ஏனெனில் இந்த வகை ஃபண்டுகள் அதிக ஏற்ற இறக்கம் ஏற்படும், இது போன்ற முதலீட்டாளர்கள் debt ஃபண்டுகளில் தான் முதலீடு செய்ய வேண்டும், debt பண்டுகள் அரசு கடன் பத்திரங்கள்,தனியார் நிறுவன கடன் பத்திரங்கள் மற்றும் மணி மார்க்கெட் இவைகளில் முதலீடு செய்யப்படுகிறது, இவ்வாறு முதலீடுகள் செய்வதன் மூலம் உங்கள் பணம் வருடத்திற்கு 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லாபம் தர வாய்ப்புகள் உள்ளது, இவ்வகை ஃபண்டுகள் உங்க்களின் முதலீட்டிற்க்கு ஒரளவுக்கு பாதுகாப்பு உடையது, ஆகவே ஒரு நல்ல நிதி ஆலோசகரை அணுகி அவரின் ஆலோசனையின் பேரில் debt பண்டுகளில் முதலீடு செய்து மியூச்சுவல் ஃபண்டின் பலனைப் பெறுங்கள், இவ்வகை ஃபண்டுகள் வங்கி வைப்பு நிதி திட்டத்தை காட்டிலும் கூடுதல் வருவாய் தரக் கூடியது.

Thursday, July 26, 2018

Mutual Funds சரியானது தான், எப்படி என்றால்?

Mutual Funds சரியானது தான்,
 எப்படி என்றால் முதலீட்டாளர்களின் வயது,முதலீட்டின் காலஅளவு,ரிஸ்க் எடுக்கும் அளவு, மற்றும் இலக்கு இவைகளை அலசி ஆராய்ந்து, எது எனக்கேற்ற ஃபண்ட் என தேர்ந்துதெடுத்து முதலீடு செய்பவர்களுக்கு Mutual Funds சரியானது.

மற்றவர்களுக்கும் சரியானது!
எப்போது என்றால் ஒரு நல்ல mutual funds ஆலோசகரை தொடர்புகொண்டு அவரின் வழிகாட்டலின்படி முதலீட்டை மேற்கொண்டால் அப்போதும் Mutual funds சரியானது தான்.

Monday, July 23, 2018

SIP புதிய உச்சம்


SIP எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானில் கடந்த மே மாதம் அதாவது 2018 மே மாதத்தில் ரூபாய் 7,554 கோடியாக வசூலாகி புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம், ரியல் எஸ்டேட்,வங்கி வைப்பு நிதி, அஞ்சலக சேமிப்பு ஆகிய சேமிப்பு திட்டங்களை விட மியூச்சுவல் ஃபண்டில் அதிக லாபம் கிடைப்பதால் சிறு முதலீட்டாளர்கள் தங்கள் சேமிப்பு திட்டத்தை மியூச்சுவல் ஃபண்டின் SIP திட்டத்திற்கு மாறி வருவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது

Sunday, July 15, 2018

பங்கு சார்ந்த மிசுவல் பண்டுடில் முதலீடு செய்வது ஏன்?

இப்போது நம்மிடம் ஒரு 10,000ரூபாயாக இருக்கும் பணம் சுமார் 30 ஆண்டுகள் கழித்து பணவீக்கம் காரணமாக இதன் மதிப்பு ருபாய் 1,500 ஆக இருக்கும். எனவே தான் பணவீக்கம் தாண்டிய அதாவது விலைவாசியை தாண்டிய வருமானம் தருவதாக உங்கள் முதலீடு இருக்க வேண்டும் என்றால் அது பங்கு சார்ந்த மிசுவல் பண்டுடில் சாத்தியம்

உங்கள் முதலீட்டுத் திட்டத்தை மாற்றி அமைப்பது இதுவே நல்ல தருணம்.

உங்களின் வங்கி வைப்பு நிதி ஐந்து ஆண்டுகளில் சுமார் எட்டு சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாகவே லாபம் கிடைக்க கூடியது, ஆனால் அதே தொகையை பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பட்சத்தில் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது, கடந்த ஐந்து ஆண்டுகளில் சில பங்கு சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் 15% த்திற்கு மேலும் லாபத்தை தந்துள்ளது. ஆகவே உங்கள் முதலீட்டுத் திட்டத்தை மாற்றி அமைப்பது இதுவே நல்ல தருணம்.

ஆபரண தங்கம் சேமிப்பு ஆகாது!


நீங்கள் ஆபரண தங்கத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் அதனை வாங்கும் போது அதற்கு செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி சேர்த்து ஒரு குறிப்பிட்ட தொகை உங்கள் முதலீட்டில் நஷ்டத்தை ஏற்படுத்தும், தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கென்று சில ஃபண்டுகள் உள்ளது, அதனில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் லாபத்தில் பெரும் இழப்பை தவிர்க்கலாம்.

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு₹20,000 எனில் 5 வருடங்களுக்கு பிறகு ₹28,000 ஆகவும் 10 வருடங்களுக்கு பிறகு ₹39,000 ஆகவும் 20...