Saturday, July 28, 2018

முதலீட்டில் கவனம் மிக மிக முக்கியம்.

    ஒருவர் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது மிக மிக கவனம் தேவை,  இந்தத் தொகையை நம்பிதான் தனது வாழ்நாள் முழுவதும் உள்ளது என்பதால் முதலீட்டை பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யவே கூடாது, ஏனெனில் இந்த வகை ஃபண்டுகள் அதிக ஏற்ற இறக்கம் ஏற்படும், இது போன்ற முதலீட்டாளர்கள் debt ஃபண்டுகளில் தான் முதலீடு செய்ய வேண்டும், debt பண்டுகள் அரசு கடன் பத்திரங்கள்,தனியார் நிறுவன கடன் பத்திரங்கள் மற்றும் மணி மார்க்கெட் இவைகளில் முதலீடு செய்யப்படுகிறது, இவ்வாறு முதலீடுகள் செய்வதன் மூலம் உங்கள் பணம் வருடத்திற்கு 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லாபம் தர வாய்ப்புகள் உள்ளது, இவ்வகை ஃபண்டுகள் உங்க்களின் முதலீட்டிற்க்கு ஒரளவுக்கு பாதுகாப்பு உடையது, ஆகவே ஒரு நல்ல நிதி ஆலோசகரை அணுகி அவரின் ஆலோசனையின் பேரில் debt பண்டுகளில் முதலீடு செய்து மியூச்சுவல் ஃபண்டின் பலனைப் பெறுங்கள், இவ்வகை ஃபண்டுகள் வங்கி வைப்பு நிதி திட்டத்தை காட்டிலும் கூடுதல் வருவாய் தரக் கூடியது.

No comments:

Post a Comment

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு₹20,000 எனில் 5 வருடங்களுக்கு பிறகு ₹28,000 ஆகவும் 10 வருடங்களுக்கு பிறகு ₹39,000 ஆகவும் 20...